பக்கங்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா (தோழர் பார்த்தசாரதிக்கு மூலிகை மன்னன் பட்டம்)

 எய்ட்சுக்குச் சித்த மருத்துவம்


'எய்ட்சு' நோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.


'சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜெர்மன் அரங்கத்தில் 10.2.97 அன்று நடைபெற்றது.


இந்தி எதிர்ப்பு போராட்ட  வீராங்கனை டாக்டர் தர்மாம்பாள் அவர்களின் மகன் 'சித்த மருத்துவச் செம்மல்’ டாக்டர் சிற்சபை அவர் களால் சித்த மருத்துவத்தின் மேன்மையை உலகுக்கு பறைசாற்ற துவக்கப்பட்டது இந்த 'சித்த மருத்துவம்* என்ற மாத இதழ்.

டாக்டர் சிற்சபை அவர்களின் மகனான டாக்டர் அம்பிகாபதி அவர்கள் இந்த இதழை தற்போது நடத்திக் கொண்டு வருகிறார்.


சித்த மருத்துவத்தின் பெருமையை மக்களுக்கு விளக்கும் முகமாக, ‘சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா என்ற பெயரில் சித்த மருத்துவ விழாவாக டாக்டர் அம்பிகாபதி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அதோடு மட்டுமல்லாமல் டாக்டர் அம்பிகாபதி அவர்கள், சித்த மருத்துவத்தை எளிய முறையில் அனைவருக்கும் கற்பிக்கும் நோக்கத்தோடு, சென்னையை அடுத்த நீலாங்கரை என்ற ஊரில் இருந்து நேர்முக பயிற்சியை உள்ளடக்கிய சித்த மருத்துவ அஞ்சல் வழிக் கல்லூரியை நிறுவியுள்ளார்.


அதன் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் இதனுடன் சேர்த்து நடத்தப்பட்டது. 


காலை 10 மணிக்கு சித்தர்களின் வழித்தோன்றலான 'தவத்திரு பழனி தங்கவேலு சுவாமிகள்' என்பவர் விழாவிற்கு தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்து உரையாற்றினார்.


டாக்டர் சிற்சபை அவர்களின் படத்தை முன்னாள் அமைச்சர் திரு. பொன்னையன் அவர்கள் திறந்து வைத்தார். 


சிந்தனைச் சிற்பி தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், சிந்தனையை கிளரும் வகையில் சில அரிய தகவல்களை கூறினார். டாக்டர் அம்பிகாபதி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


பிறகு மருத்துவர்கள் கருத்துரை மற்றும் சித்தர் நூல்களில் மிகுந்து காண்பது ஆன்மீகமா? - மருத்துவமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் போன்றவை நடைபெற்றன.


'எய்ட்சு'க்குச் சித்த மருத்துவம்!


எய்ட்சு நோய்க்கு சித்த உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டது. எய்ட்க நோய் நீங்கிவிட்டதா என்று கண்டறிய வெகுகாலம் பிடிப்பதால் இது சோதனை முறையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


அஞ்சல் வழிக் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களை நீதியரசர் மோகன் அவர்கள் வழங்கி உரையாற்றினார்.


அம்பிகாபதி அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் சான்றோர்களை பாராட்டும் முகமாக முதலாவதாக இந்த ஆண்டு இந்த விழாவில் இரண்டு தமிழ்ச் சான்றோர் களுக்கும், இரண்டு சித்த மருத்துவ சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.


கழகத் தோழர் பார்த்தசாரதிக்கு மூலிகை மன்னன் பட்டம்


பேராசிரியர் அ.ச. ஞான சம்பந்தன் எம்.ஏ.அவர்களுக்கு "அருள்நெறி ஆசான்' என்ற விருதும், அருணை வடிவேலு அவர்களுக்கு "யோக நெறி காவலர்" என்ற விருதும், அதேபோல், சித்த மருத்துவ சான்றோர்களான பேராசிரியர் டாக்டர் தியாகராஜன் எல்.அய்.எம். அவர்களுக்கு சித்த மருத்துவத் தந்தை" என்ற விருதும்,


பேராசிரியர் டாக்டர் ஆனந்த குமார் ஜி.சி.அய்.எம். அவர்களுக்கு "சித்த மருத்துவச் சுடர்" என்ற விருதும் வழங்கப்பட்டது. இதேபோல், பிரபாகர் பத்ரி என்பவருக்கு இசை சித்தர் என்ற விருதும் வழங்கப்பட்டது.


விழாவில் அய்ந்து பேர்களுக்கு பட்டமும் வழங்கப்பட்டது. இதில் தென் சென்னை திராவிடர் கழக இளைஞரணி பொருளாளர் செ.ர. பார்த்தசாரதி அவருக்கு "மூலிகை மன்னன்" என்ற பட்டமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதே போல் சந்திரசேகரன் என்பவருக்கு

''மூலிகை முரசு" என்ற பட்டமும் வழங்கப்பட்டது.


மூலிகைக் கண்காட்சி


விழாவையொட்டி மூலிகை கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


 கண்காட்சியை தவத்திரு பழனி தங்கவேலு சுவாமிகள் திறந்து வைத்தார்.


இக்கண்காட்சியில் 600 மூலிகைகள் இடம்பெற்றன. இதில் 150 மூலிகை தாவரங்கள் தொட்டியில் வளர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.


5-ம் பக்கம் பார்க்க

4-ம் பக்கத் தொடர்ச்சி


விழாவிற்கு விளம்பரங்கள் குறைவாக இருந்தும், மூலிகை கண்காட்சியை காண மக்கள் அலை அலையாக வந்து மூலிகைகளைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.


 விளக்கமளித்து கொண்டிருந்த செ.ர.பார்த்தசாரதி அவர்களிடம் சில முக்கியமான மூலிகைகளைப் பற்றி கேட்டபோது, அவர் சொன்ன தகவல் வருமாறு:-


1. அருகம்புல்


இதை தாவரவியல் பெயரில் 'சைனோடான் டாக்டைலான்' என்று கூறுவர். சங்க காலத்தில் 'அருகை' என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இதை அருகம்புல் என்று அழைக்கின்றனர்.


இந்த மூலிகையை 'சாகா மூலிகை ' என்று சொல்லலாம். இந்த புல்லிலுள்ள செல்களுக்கு சாவு கிடையாது. இதன் செல்லிலுள்ள ஆர்.என்.ஏ. (R.N.A.) மூலக்கூறுகளை சிதைய விடாமல் சில சுரப்பி நீர்கள் பார்த்துக் கொள்வதால் இந்த செல்கள் சாவதில்லை. (மனிதன் உட்பட மற்ற உயிர்களின் செல்களில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறு சிதைவதால் தான் மூப்படைந்து சாக நேரிடுகிறது.)

இதை ரஷ்ய விஞ்ஞானி மனிதனுக்கு ஆய்வு செய்து கொண்டு வருவதாக 'குப்ர விஷ்' என்பவர் கூறுகிறார். (ஆதாரம்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு).


இந்த அருகம்புல் இரத்தத்திலுள்ள நஞ்சுகளை போக்கும்; இதயத்தை பலப்படுத்தும்; உடல் வலிகளை போக்கும்; சிறுநீர்தாரை எரிச்சலை நீக்கும்.


அருகம்புல்லை இடித்து சாறு எடுத்தோ அல்லது அப்படியே கொதிக்க வைத்தோ, வடிகட்டி எடுத்துக்கொண்டு அதனுடன் பாலும் சிறிது சர்க்கரையும் சேர்த்து அருந்த மேற்கண்ட நோய்கள் அகலும்.


2. பாம்பு களா


இதை வடமொழியில் 'சர்ப்பகந்தி' என்று அழைப்பர். இந்த செடிகளின் வேர் பகுதி பாம்புபோல் வளைந்து இருக்கும். இம்மூலிகை மலைச் சாரல்களில் தன்னிச்சையாக வளர்ந்திருக்கும்.


இந்த மூலிகை ஆயுர்வேத மருத்துவத்தில் தான் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.


இதன் வேரை நம் நாட்டில் பாம்புக் கடி நஞ்சுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.


இதன் வேரிலிருந்து இரத்த அழுத்தத்திற்கு மேலை நாட்டில் மருந்து கண்டுபிடித்துள்ளனர்.


வேரிலிருந்து எடுக்கப்படும் 'ரிசெர்பைன்' என்ற திரவத்தில் இருந்து இந்த மாத்திரைகளும், ஊசி மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. 


இதன் இலைகளை அவித்து அரை அவுன்சு சாறெடுத்து, நாலு அவுன்சு

பாலோடு கலந்து காலையில் மட்டும் நாலைந்து தினங்களுக்கு குடித்து வர இரத்த அழுத்தம் குறையும். தூக்கமின்மை போகும், மன அமைதி ஏற்படும், நரம்பு பலப்படும். 


3. இம்பூரல்


'இம்பூரல் காணாதான் இருமி இருமி செத்தான்' என்பது பழமொழி!


இந்த மூலிகை தும்பை இலையை போல் சிறிய அளவில் இருக்கும். வெண்ணிற சிறிய பூ பூக்கும்.


இந்த மூலிகையின் வேரை எடுத்து காய்ச்சி நாலைந்து மிளகு தட்டி போட்டு உள்ளுக்குக் கொடுக்க இரத்த வாந்தி இருமல், காசம் குணமாகும்.

- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் 4, 23.3.97


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக