கரிசலாங்கண்ணி மூலிகையை பற்றி பார்க்க போகிறோம்.
கரிசலாங்கண்ணி மூலிகைக்கு கரிசனாங்கண்ணி, கரிசாலை கைகேசி, கரியசாலை, கைவீசி இலை, கையாந்தகரை, கரிப்பான், கையான் என்று வேறு பெயர்களும் உள்ளன.
இந்த கரிசலாங்கண்ணி மூலிகையில் நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை என வகைகள் உள்ளன. இதில் இரண்டு வகைகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.
வெள்ளை நிற பூக்களை உடைய கரிசலாங்கண்ணியை வெள்ளை கரிசலாங்கண்ணி என்பர் இவை வயல்வெளிகளில் தாராளமாக கிடைக்கும்.
அடுத்து மஞ்சள் நிற பூக்களை உடைய மஞ்சள் கரிசலாங்கண்ணி! இதை பொற்றலை கையாந்தகரை என்றும் கூறுவர். இந்த மூலிகை அவ்வளவு எளிதில் கிடைக்காது.
முதலில் கூறிய வெள்ளை கரிசலாங்கண்ணி செடி வகையை சேர்ந்தது ஆனால் மஞ்சள் கரிசலாங்கண்ணி கொடி வகையை சேர்ந்தது.
நாம் இப்போது பார்க்க இருப்பது மஞ்சள் கரிசலாங்கண்ணியை பற்றி ஆகும்.
இதன் இலைகள் ஓரளவு வெட்டு காயத்தழை இலையை போன்று இருக்கும். இந்த இலையை கசக்கிப் பிழிந்தால் கரு நிற சாறு வரும். இது கைகளில் கருப்பு நிற கரையை ஏற்படுத்தும்.
கொடி நன்றாக படர்ந்து ஆங்காங்கே வேர்கள் விட்டு புதுப்புது செடிகளாக வளரும். சூரியகாந்தி பூ போன்ற சிறிய வடிவில் மஞ்சள் நிற பூ பூக்கும்.
இந்த கரிசலாங்கண்ணி செடி சூரியகாந்தி செடியின் குடும்ப வகையை சேர்ந்தது.
மஞ்சள் கரிசலாங்கண்ணியில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை மிகுதியான அளவில் உள்ளன..
வள்ளலார் காயகற்ப மூலிகைகள் என்று மூன்று மூலிகைகளை சொல்கிறார் அதில் முதன்மையான மூலிகை கரிசலாங்கண்ணி மூலிகையாகும்.
இரும்பு சத்தும் சுண்ணாம்பு சத்தம், பாசுபரசு சத்தும் உடலுக்கு மிக மிக இன்றி அமையாத தாகும். கல்லீரலுக்கும் இரத்தத்திற்கும் இரும்பு சத்து மிகமிக தேவை. இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.
அதேபோல் சுண்ணாம்புசத்து கொழுப்பை கரைக்கக் கூடியது, தோல் நோய்களை குணப்படுத்தக் கூடியது. தோலில் ஏற்படும் அரிப்பை நீக்கும், உடல் அழற்சியை போக்கக்கூடியது. எலும்பு, தசை, நரம்புகளுக்கு ஊட்டம் தரக்கூடியது.
இந்த சத்துக்கள் ஒருங்கே இருப்பது இந்த கரிசலாங்கண்ணி மூலிகையில் தான்.
கரிசலாங்கண்ணி மூலிகை மட்டுமல்ல, கீரை வகையையும் சேர்ந்ததாகும். ஆகையால் இந்த கரிசலாங்கண்ணி கீரையை வாரம் ஒரு முறை பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வரலாம். இதனால் உடல் வலுப்பெறும் தோல் நோய்கள் அகலும், பற்கள் வலுப் பெறும், கல்லீரலைப் பற்றிய நோய்கள் நீங்கும். இரும்பு சத்து குறைபாட்டால் வரக்கூடிய சோகை நோய் நீங்கும். இரத்தத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் அளவு பெருகும். மயக்க உணர்வுகள் நீங்கும்.
கரிசலாங்கண்ணி மூலிகையை தூள் செய்து வைத்துக் கொண்டு அதில் சிறிதளவு எடுத்து பாலில் கலந்து காய்ச்சி குடித்து வரலாம்.
கரிசலாங்கண்ணி மூலிகை இலையை சாறு எடுத்தோ அல்லது அப்படியே நசுக்கி தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் இளநரை போகும், பொடுகு வராது.
மேலும் இது போன்று மூலிகைகளை
பற்றி தெறிந்து கொள்ள எங்களது 'வலைப் பூ' பக்கத்தை தொடர்ந்து பாருங்கள்! எங்களது 'வலைப் பூ' பக்கம் தொடர்ந்து செயல்பட உங்களது அதரவு
தேவை.. ஆகையால் எங்களது 'வலைப் பூ' பக்கத்தை விரும்புங்கள், அதாவது லைக் தெரிவியுங்கள், அப்படியே கருத்துகளையும்
தெரிவியுங்கள். நன்றி1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக